தேஜா சஜ்ஜா நடித்துள்ள பான் இந்தியா படமான ஹனுமான் படம் இரண்டே வாரத்தில் ரூ.250 கோடிவரை வசூல் செய்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் திரையரங்கில் வெளியான இப்படம் இரண்டே வாரத்தில் ரூ.250 கோடிவரை வசூல் செய்துள்ளது. வெறும் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இரண்டே வாரத்தில் ரூ.250 கோடிவரை வசூல் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2024 ஆம் வருடத்தில் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிக வசூலைக் குவித்த படமாகவும், அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது.
தெலுங்கில் நேற்று வெளியான அயலான் படம் பல தியேட்டர்களில் வெளியிட முடியாமல் இருந்துள்ளது. ஆகையால் ஹனுமான் படம் திரையிடப்பட்டுள்ளது. இதனால் ஹனுமான் படம் ரூ.300 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.