இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்நிலையில், நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல குறைய தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 209 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 89 ஆயிரத்து 827 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகபட்சமாக கர்நாடகாவில் 52 பேருக்கும், மகாராஷ்டிராவில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 85 ஆயிரத்து 103 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.