காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி காவிரி ஒழுங்கற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.