இந்தியக் கடற்படை தனது சமீபத்திய ஆய்வுக் கப்பலான சந்தாயக்கை 2024, நாளை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்திலிருந்து இயக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், கிழக்குக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், மூத்தக் கடற்படை அதிகாரிகள், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகிப்பார்கள்
கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு ஆய்வுக் கப்பல்களில் முதலாவது பெரிய கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. இந்தத் திட்டத்தை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
துறைமுகம் மற்றும் கடலில் கடுமையான மற்றும் விரிவான சோதனைத் திட்டத்தை முடித்த பின்னர் 2023, டிசம்பர் 4 அன்று சந்தாயக், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாதுகாப்பான கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்வதே இக்கப்பலின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பலவிதமான கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இது இருக்கும்.