திவால் ஆகும் நிலையில் கேரள பொருளாதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக கேரள உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இண்டி கூட்டணியில் உள்ள 3 பேர் ஒருங்கிணைந்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். தெற்கு மற்றும் வடக்கு என பிரிவினையை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர்.இது அவர்களின் இயலாமையையும் ஊழலையும் மறைக்க நடத்தும் அரசியல் நாடகமே தவிர வேறு ஏதுமில்லை என தெரிவித்தார்.
கேரள அரசு பொருளாதார கொள்கைகளை தவறாக கையாண்டுள்ளது. 2016 முதல் 2023 வரை கேரளாவுக்கு ரூ.1,10,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
கேரள அரசு திவாலாகும் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணம் வராவிட்டால் கேரளாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக இருக்கும் என்றும் ராஜிவ் சந்திரசேகர் கூறினார்.