24 வருட சாதனையை முறியடித்த இலங்கை வீரர் நிஷாங்கா !
Mar 15, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

24 வருட சாதனையை முறியடித்த இலங்கை வீரர் நிஷாங்கா !

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை  வீரர் நிஷாங்கா இரட்டை சதம் அடித்து 24 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிஷாங்கா 20 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 210 ரன்களை எடுத்து  கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் அவிஷ்கா 88 பந்துகளில் 88 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதீர 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஃபரீத் அகமது 2 விக்கெட்களும், முகமது நபி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தனர்.  இதில்  அதிகபட்சமாக அஸ்மத்துல்லா 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முகமது நபி 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

துஷ்மந்த சமீரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி 42 ரன்களை எடுத்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டநாயகன் விருது 210 ரன்களை ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷாங்காவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அஇதுமட்டுமல்லாமல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான ஜெயசூர்யாவின்  189 ரன்களை சாதனையையும் நிஷாங்கா முறியடித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags: CricketsrilankaAfghanistanODIpathum nissanka
ShareTweetSendShare
Previous Post

பேருந்து இல்லாததால் பயணிகள் சாலை மறியல் : சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies