ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைத்து இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கான உரிமைக்கு ரஷ்யா முழு ஆதரவளிப்பதாக ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து டிசம்பரில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையே ஆழமாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஐ.நா.அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவும், 2021-2022ல் கவுன்சிலின் தலைமைப் பதவியில் தனது திறமையை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார எழுச்சிகளை சமாளிப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதற்கும், ஒரு சிலருக்கு அல்லாமல் அனைவருக்கும் பலன்களை அதிகரிக்க டிஜிட்டல் மற்றும் ஆற்றல் மாற்றங்களை மேம்படுத்துவதற்கும், நாங்கள் BRICS வடிவத்தில் விரிவாக ஒத்துழைக்கிறோம் என்றும் அவர் கூறினார்.