தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்கள்!
Oct 10, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புத்தொழில் இந்தியா முன்னெடுப்பு: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்களைத் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அங்கீகரித்துள்ளது என தொழில், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர்,

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு  2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்னெடுப்பைத் தொடங்கியது.

நாட்டில் ஒரு துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள், ஊக்கத்தொகைகளை உள்ளடக்கிய புத்தொழில் நிறுவனங்களுக்கான செயல் திட்டத்தை அரசு வெளியிட்டது. இந்தச் செயல் திட்டம் “எளிமைப்படுத்துதல்,  கையாளுதல்”, “நிதி ஆதரவு, ஊக்கத்தொகை”, “தொழில்துறை கல்விக் கூட்டாண்மை, தொழில் காப்பகம்” போன்ற பகுதிகளுடன் 19 செயல் வகைகளை உள்ளடக்கியது.

செயல் திட்டத்தின் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் புத்தொழில் சூழல் அமைப்பை அங்கீகரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி , புத்தொழில் இந்தியா தொடக்க நிதித் திட்டம், புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகிய மூன்று முன்னோடித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் காப்பகங்கள் மூலம் புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதி உதவி வழங்கப்படுகிறது. புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதியத்தில் ரூ.945 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில், மொத்தம் ரூ.86.10 கோடி அளவிற்கு 20 தொழில் காப்பகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் காப்பகங்களுக்கு  2023 டிசம்பர் 31 வரை ரூ.43.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியம் மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. இது இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் மாற்று முதலீட்டு நிதியாக மூலதனத்தை அளித்து புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடாக அளிக்கிறது.

புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியத்தில் ரூ.10,000 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி மொத்தம் ரூ.500 கோடியை 6 மாற்று முதலீட்டு நிதியத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது.  2023 டிசம்பர் 31 வரை மாற்று முதலீட்டு நிதியத்திற்கு ரூ.384 கோடி வழங்கியுள்ளது.

தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள் மூலம் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்க உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறைக்கு பிணையமில்லா கடன்களை வழங்குவதற்காக புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தேசியக் கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2023 ஏப்ரல் 1 முதல் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி, தகுதியான அங்கீகரிக்கப்பட்ட 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.8.65 கோடி மதிப்பிலான  கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முன்னெடுப்பின் கீழ் தமிழ்நாடு உட்பட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகரங்கள், சிறிய நகரங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் 2016-ம் ஆண்டில்  அங்கீகரிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை 2023 டிசம்பர்  31 நிலவரப்படி 1,17,254 ஆக அதிகரிக்க வழிவகுத்தது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி மொத்தம் 7,559 புத்தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: tamilnaduparliment
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

Next Post

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

Related News

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies