கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து ஒன்று, வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தது. அப்போது, மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில், எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது அந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
பேருந்தில் இருந்த பயணிகளைச் சக பணிகள் காப்பாற்றினர். இதனால், அங்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த விபத்துக் காரணமாக, கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துத் தற்காலிமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.