கங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், அவரது மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக கூறப்படுகிறது. அவருடன் 14 எம்எல்ஏக்களும் பாஜகவில் சேரலராம் என தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கமல்நாத்தின் மகன் நகுல் தனது சமூக வலைதள பக்கத்தில் சுய விவரக்குறிப்பில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை நீக்கியுள்ளார்.
மேலும் சிந்த்வாரா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த கமல்நாத் தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு இன்று டில்லி சென்றுள்ளார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல்நாத் அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என குறிப்பிட்டார்.
பாஜகவில் இணைந்தால் முதலில் உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார். திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள கமல்நாத் அடுத்த ஓரிரு நாட்களில் பாஜகவில் இணைவார் என எதிர்பாக்கப்படுகிறது.