சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று கூடியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜக தலைமையிலான முகாமை வழிநடத்துகிறார். ஆனால் இண்டி கூட்டணியில் குடுமப அரசியல் நடத்தும் கட்சிகள் நிறைந்துள்ளன.
எதிர்க்கட்சிகள் “2G, 3G, 4G” கட்சிகளால் நிரம்பியுள்ளன, இது கட்சிகளை இயக்கும் குடும்பங்களின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையைக் குறிப்பிடுகிறது.
சமூகத்தின் அனைத்து பிரிவினரின் மேம்பாட்டிற்காகவும், நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதற்காகவும் பிரதமர் பாடுபடுகிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பதில் மக்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நினைக்கும் அதே வேளையில், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் தங்கள் குழந்தைகளை பிரதமராகவும் முதல்வராகவும் ஆக்க நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று கூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால், தேநீர் விற்பவரின் மகன் நாட்டின் பிரதமராக வந்திருக்க மாட்டார் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.