பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 
Sep 5, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளிநாட்டில்  இருந்து நிதி பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் புகார் மனு அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக, வக்ஃப் வாரியத்தில் மர்மமான செயல்கள் நடப்பதாக, தமிழக சூஃபி இஸ்லாமிய வாரியம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில்,  ரஹ்மான் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு நிதி கோருவதாக வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர்  அப்துல் ரஹ்மான் தலைமையில், திருச்சி வேப்பூரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பரவலாக பேசப்பட்டது. மேலும்  அப்துல் ரஹ்மான் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை கோருவதாகவும், மாநிலம் முழுவதும் பல கூட்டங்களை நடத்தி, அந்த கல்லூரிக்கு 300 கோடி ரூபாய் கேட்டதாக இஸ்லாமிய சூஃபி வாரியம் தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான் உம்ராவுக்காக மக்கா மற்றும் மதீனாவுக்கு மட்டுமே செல்ல அனுமதி பெற்ற நிலையில்,    14-12-2022 அன்று ஜெட்டாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் அனுமதிக்கப்படாத நாடுகளுக்குச் சென்றதன் மூலம்,  இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வரும் குற்றங்களைச் செய்துள்ளார்.

துபாயில் உள்ள வணிகக் கூட்டாளிகள் மூலம் தங்கள் கறுப்புப் பணத்தைப் புகட்டவும், முதலீடு செய்யவும் உதவிய, பல கடந்த கால மற்றும் தற்போதைய அரசியல்வாதிகளின் தொடர்பு முகவராக அவர் பணியாற்றியதாகவும் சூஃபி வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 2022 இல், அப்துல் ரஹ்மான் மீது தேசியக் கொடி மற்றும் சின்னத்தை அவமரியாதை செய்ததாகக் குற்றம் சாட்டி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Enforcement DirectorateNirmala SitharamanSufi Islamic BoardTamil Nadu Wakf Board chairman
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Next Post

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies