வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில் 15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ராஜலட்சுமி என்பவர்.
மதுரையில் துவங்கியுள்ள இந்த பிரச்சாரம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா என 15 மாநிலங்களுக்கு புல்லட்டில் செல்கிறார். இந்த பயணம் ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைகிறது. டெல்லியில் தனது பிரச்சாரத்தை முடிக்க உள்ளார் ராஜலட்சுமி. புல்லட் வாகனத்தில் சென்று பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
மதுரையில் இருந்து புல்லட் மூலம் பிரச்சாரத்தை துவங்கியுள்ள ராஜலட்சுமிக்கு, சென்னை மதுரவாயலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி முகம் பதித்த முகமூடியை அணிந்து வந்த பா.ஜ.க-வினர் 2024 தேர்தலில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைய முழக்கங்களை எழுப்பி, அவரை வழி அனுப்பி வைத்தனர்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தனது புல்லட் பயணப் பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.