சென்னை சென்ட்ரல் – தாம்பரம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் – தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே சாா்பில், பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை மெட்ரோவில் அதிக பயணிகள் வருவார்கள். பயணிகளின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் காலை 10:00 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழு நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, காலை 10 மணி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மாலை 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையில் வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.