டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் கம்பர் தனது ராமயணத்தை அரங்கேற்றம் செய்தாரோ, அதே இடத்தில்,கம்பனின் ராமாயணத்தை கேட்க வாய்ப்பு கிட்டியதாக அவர் தெரிவித்தார். அனுபவத்தை வர்ணிப்பது கடினம்.
அந்த உணர்ச்சி தனி ஒரு உலகம். அது எனக்கு “ஒரே பாரதம் உன்னத பாரதம்”நினைவூட்டியது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் அயோத்தி ராமர் கோயில் விழாவுக்கு செல்லும் முன் நான் ஒரு சாதாரண மனிதனாக, ஶ்ரீராமருடன் தொடர்புடைய கோவில்களான நாஸிக், குருவாயூர், லேபாக்ஷி, ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி சென்றேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.