ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்! - டாக்டர் ஜிதேந்திர சிங்
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் நரேந்திர மோடியின் நாளைய ஜம்மு வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறினார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்த  நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்.

“சங்கமும், நிர்வாகமும் ஒன்றிணைந்து அதற்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்திருப்பது தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தின் பத்து மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள் என்று  கூறினார்.

பூஞ்ச், கிஷ்த்வார், ராம்பன் உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்று இரவு நகரத்திற்கு வருவார்கள் என்றும், அண்டை மாவட்டங்களான கதுவா, சம்பா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் நாளை காலை அந்த இடத்தை வந்தடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அழைப்பாளர்களுக்கு தங்குமிடம், சிற்றுண்டி சுகாதார வசதிகள் தொடர்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் வசதியான முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று கூறினார்.

30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மத்திய அரசின் கல்வி, சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே, பெட்ரோலியம் ஆகிய நான்கு அமைச்சகங்களால் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பிரதமர் திரு மோடி உயர் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார். யூனியன் பிரதேசத்தில் இரண்டு எய்ம்ஸ், ஐஐஎம், ஐஐடி, ஐஐஎம்சி ஆகியவை நிறுவப்பட்டிருப்பது, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி அதிக அளவு முன்னுரிமை அளிக்கிறார் என்பதற்கான சான்றாகும் என்று கூறினார்.

மோடியின் பொது நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான, தேவையான ஏற்பாடுகள் குறித்து சிவில் நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கினார்கள்.

Tags: PM ModiCentral MinisterJammu and Kashmir
ShareTweetSendShare
Previous Post

WPL : கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி ? ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மந்தனா!

Next Post

2047-க்குள் இந்தியா முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies