WPL : கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி ? ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மந்தனா!
Jul 29, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி ? ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மந்தனா!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 அணிகள் விளையாடின.

முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மார்ச் மாதம் நடைபெற்ற இதன் முதலாவது சீசன் போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலம் மும்பையில் மட்டுமே நடத்தப்பட்டன.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

முதலாவது கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த ஆண்டுக்கான பெண்கள் பெண்கள் பிரீமியர் லீக் தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த சீசன் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியிலிருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் நாங்கள் புதிய வீரர்களை வாங்கியுள்ளோம். எனவே கடந்த சீசனை விட இந்த முறை அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் நாங்கள் அணியில் இணைந்தோம். அதனால் மற்ற வீராங்கனைகளை பற்றி 90 சதவீதம் எங்களுக்கு தெரியாது. இந்த ஆண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முக்கியம். அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “என்னுடைய தனிப்பட்ட இலக்கை பொறுத்த வரை கடந்த சீசனில் நான் எதிர்பார்த்த செயல்திறனை என்னால் வழங்க முடியவில்லை. இந்த முறை, கடந்த ஆண்டு தவறுகளை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை. எங்களது பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக இந்த முறை வீராங்கனைகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.

Tags: WPLWPL: Will RCB win the trophy? Mandana gave hope to the fans!
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies