உலகளாவிய தலைவர்களின் நட்சத்திர மண்டலத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரகாசமான நட்சத்திரம் என்றும், அவரது தனித்துவமான பார்வையால் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா முன்னேறி வருகிறது. பிரதமரின் தலைமையின் கீழ், அனைவருடனும் ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் முயற்சியுடனும் ” (Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas”) நாடு முன்னேறி வருகிறது.
சமூகத்தின் எந்தப் பிரிவினரும், எந்தத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது பின்தங்கியதாகவோ உணரவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, முதலீடு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புதிய வளர்ச்சியை அடையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரின் தலைமையிலும் முதலீடுகள் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, தொழிலதிபர்களுடன் இணைந்து குஜராத்தில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தினார் என்பதை நாடு பார்த்தது. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் பரவியது மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவியுள்ளது.
குஜராத் மாடலை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் பின்பற்றி, வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகின்றன என்று கூறினார்.