கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில்
, கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாடு முழுவதும் உள்ள விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற நமது அரசு உறுதி பூண்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.