2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் பீகாரில் ஆய்வு செய்ததது.
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு அம்சங்கள்,வாக்குச்சாவடிகள்,வாக்காளர் பட்டியல், தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு, வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை சென்னை வருகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் நாளை பிற்பகல் அவர் ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.