ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை
Oct 27, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 22, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அப்போது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்ற முதல் யாத்திரை நமது என் மண் என் மக்கள் யாத்திரைதான். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றதில் அறிந்து கொண்ட உண்மை, தமிழக மக்கள் அரசியலில் நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவின் யாத்திரையாக ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது.

திமுக அரசின் 33 மாத கால ஊழல் ஆட்சியைத் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.  பாரதப் பிரதமர் மோடியின், பத்தாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்கிறோம். நமது என் மண் என் மக்கள் பயணத்தின் 234 ஆவது தொகுதி நிறைவு விழா, வரும் பிப்ரவரி 27 அன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. நமது பிரதமர் மோடி அந்த மாபெரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார். பிற மாநிலங்களை விட தமிழகத்துக்கு நமது பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், நமது நாடு எப்படி இருக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதால், கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்கிறது.

அரவக்குறிச்சி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மூன்று நதிகள் அருகில் ஓடியும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. இவை அனைத்தும் மாற வேண்டும். கரூரில், விவசாயம், நீர் மேலாண்மை, தொலை நோக்குப் பார்வையோடு திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் வர வேண்டும். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.

தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவரது தம்பி 280 நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். திமுகவில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalai en maan en makkalarvakurichisenthilk balajibjpkarurannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவர்கள் படிக்க விரும்பும் வெளிநாடுகள் : முதல் இடத்தில் எந்த நாடு?

Next Post

உருவாகிறது முகேஷ் அம்பானியின் ‘ஹனூமான்’ என்ற ஓபன் AI!

Related News

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது : மத்திய குழு

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies