கர்நாடகா மாநிலத்தில் ₹6,168 கோடி முதலீட்டில் 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பானாப்பூர் கடனகேரி பிரிவு சாலை, ஐஹோல் போன்ற வரலாற்றுத் தளங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பட்டடகல்லு, பாதாமி, பெல்லாரி மற்றும் ஹோஸ்பெட்டின் சுரங்க மற்றும் தொழில்துறை மையங்களுக்கு இணைப்பை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபைல் முதல் இடகுண்டி வரையிலான சாலை கார்வார் மற்றும் மங்களூரு துறைமுகங்களுக்கான இணைப்பை பலப்படுத்துகிறது. மஹாராஷ்டிரா எல்லை முதல் விஜயப்பூர் வரையிலான சாலை கர்நாடகாவின் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது விஜயபூரின் சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் மிரியன், சிஞ்சோலி மற்றும் கலபுர்கியின் சிமென்ட் பெல்ட்டை இணைக்கிறது.
பெல்லாரி பைபாஸ் நெரிசலைக் குறைக்கிறது, மேலும் பெல்லாரி முதல் பைரபுரா வரையிலான பகுதி மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கிறது.