சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் முக்கிய நிறுவனங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிவரத்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சென்னையில் தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவில்லை.
இந்த சோதனையில், தி.மு.க ஆதரவு நிறுவனங்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தி.மு.க. ஆதரவாளர்கள் சிலர் தங்களது நிறுவனத்தை பூட்டுபோட்டு பூட்டிவிட்டு, செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.