பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையை ஏற்று, டெல்லியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன் மற்றும் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் விஜயதரணி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.