இனி தமிழகத்தில் திமுகவை தேடினாலும் கிடைக்காது! - பிரதமர் மோடி
Jul 15, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி தமிழகத்தில் திமுகவை தேடினாலும் கிடைக்காது! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 28, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் ஒத்துப்போகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார்.

தொடர்ந்து மதுரை சென்று அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி சென்ற அவர் அங்கு ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் என்று தெரிவித்தார். மேலும் ” தமிழ்நாடு மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. மத்திய பாஜக அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம். தமிழ்நாடு மக்கள் வருங்காலத்தை பற்றி மிகத் தெளிவுடன் இருக்கின்றனர்.

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் ஒத்துப்போகிறது. டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தூரம் குறைந்துவிட்டது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் 1 கோடி வீடுகளுக்கு மேல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 40 லட்சம் குடும்பங்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் பெண்களை சேர்ந்துள்ளது என்பதால் அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த தமிழ்நாட்டின் எல். முருகன் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்.

தமிழ்நாட்டு நலனுக்காக நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு இங்குள்ள மாநில அரசு தடுத்து வருகிறது. நாட்டை கொள்ளையடிக்கவே திமுக அரசு வளர்ச்சியை தடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழக மக்கள்  திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இந்தியா 100 மடங்கு முன்னேறினால், தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும்.

திமுக பொய்வேஷம் போடுகிறது, திமுக பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. திமுகவால் இங்கு இருக்க முடியாது. திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் இங்கு அண்ணாமலை இருக்கிறார்.

பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும். திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனே முக்கியம் என்று  இருக்கிறார்கள்.

மத்திய அரசின் சீரிய திட்டங்களால் உலக அளவில் இந்திய மக்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களை மற்ற நாட்டினர் வியப்புடன் பார்க்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகள் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உட்கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.

செயற்கை நுண்னறிவு துறை இந்தியாவின் வளர்ச்சி புதிய உயரத்தை எட்டும். 2024 தேர்தலில் வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையை கொண்டு பாஜக நிற்கிறது. ஆனால் திமுகவும் காங்கிரஸும் இதற்கு எதிராக நிற்கிறது.

மக்களைவிட குடும்ப நலனே முக்கியம் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேறப்போவதில்லை. சுயநலத்தோடு வரும் கட்சிகளை தமிழ்நாடு கண்டிப்பாக நிராகரிக்கும். குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவோருக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது, இன்று 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் முலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். இலங்கை அரசிடமிருந்து ஏராளமான தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வந்துள்ளோம். பாகிஸ்தானிடமிருந்து பைலட் அபிநந்தனை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தது பாஜக அரசு எனத் தெரிவித்தார்.

10 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் தற்போது எனக்கு இருக்கிறது, இன்னும் இந்தியாவை முன்னேற திட்டங்கள் கொண்டு வரப்படும். மூன்றாவது முறையாக எனது தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.

Tags: PM Moditamilnadu
ShareTweetSendShare
Previous Post

பிக் பாஸ் பிரபலம் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை!

Next Post

இந்திய மக்கள்தொகையின் 10,000 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர்!

Related News

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கம் : நர்சரி பண்ணையாளர்கள் கவலை!

25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் : நியூயார்க்கில் நாளை ஏலம்!

உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு!

விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த சுபான்ஷு சுக்லா!

அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இங்கிலாந்தில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் : 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும் : டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெற்றதாக வழக்கு – நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவு!

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies