ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல : அண்ணாமலை
Aug 4, 2025, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல : அண்ணாமலை

திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக சென்னை மாறிவிட்டது !

Web Desk by Web Desk
Feb 29, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர். நேற்றைய தினம், குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ₹1200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags: tamilnadubjpannamalaiUdayanithistalin
ShareTweetSendShare
Previous Post

நாளை தமிழகம் வருகிறது துணை ராணுவப்படை!

Next Post

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies