மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்கள் அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்களை அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மதுரையில் உள்ள AIIMS மருத்துவமனைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைய 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்ததது. மேலும் மரங்களை அகற்ற தமிழக அரசு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி இலாகாவிலிருந்து வெளியேறிய ஒரு அதிருப்தி அமைச்சர், உண்மைகளுக்கு மாறான த கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குஜராத், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம் பாதுகாக்கப்பட்ட முதலீடுகள் வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும தமிழகத்தை விட அதிக முதலீடு வந்தது.
2013-14ல் தமிழகத்தின் தனிநபர் NSDP ₹1,16,960 ஆகவும், 2022-23ல் ₹2,75,583 ஆகவும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு CAGR 8.94% ஆக இருந்தது. தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-14ல் ₹74,920 ஆகவும், 2022-23ல் ₹1,96,983 ஆகவும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கான CAGR 10.15% ஆக இருந்தது.
இதிலிருந்து, தேசிய அளவில் தனிநபர் CAGR TN ஐ விட 1.21% அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திமுகவுக்கு ரியாலிட்டி செக் கொடுத்துள்ளார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.