தமிழக கிராமங்களிலும் போதை பொருள் கிடைப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார். ஜாபர் சாதிக் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
அவர் நேரில் ஆஜராகததால் அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி, அவரது வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் அண்ணாமலையின் வீடியோவை டேக் (tag)செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் நான் வசிக்கும் இடம் போன்ற தொலைதூர கிராமங்களுக்கு போதைப்பொருள் வந்துள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எங்கள் பள்ளிக் குழந்தைகளை போதையில் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம்.
இங்கு அண்ணாமலை பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பிரச்சினையை நாம் உறுதியாகக் கையாள வேண்டும். சிங்கப்பூரும், மலேசியாவும் மிகவும் வலுவான போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
I can confirm that narcotic drugs have arrived in remote villages like where I live in Tamil Nadu. We are struggling to keep our school kids off drugs.
What Annamalai-ji has discussed here goes well beyond politics. We have to deal with this issue resolutely.
Singapore and… https://t.co/dsFj0pL5D9
— Sridhar Vembu (@svembu) February 29, 2024