தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ‘எனது பாரதம் எனது குடும்பம்’ என்று கூறி பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள கணக்கில், ‘சௌகிதார்’ (chowkidar) என்று தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பலரும் தங்கள் பெயருக்கு முன்னாள் சௌகிதார் என்ற பெயரை சேர்த்துக் கொண்டனர். ‘சௌகிதார்’ என்ற சொல்லுக்கு ‘காவலாளி’ என்று அர்த்தம்.
இதுகுறித்து அன்று பிரதமர் மோடி கூறியதாவது, உங்கள் சௌகிதார் உறுதியாக நின்று நாட்டிற்கு சேவை செய்கிறார். ஆனால், நான் தனியாக இல்லை. நாட்டில் உள்ள ஊழல், சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் சௌகிதார்கள். ஆதலால், நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் சௌகிதார்தான். இன்று ஒவ்வொரு இந்தியரும் ‘நானும் சௌகிதார்தான்’ என்று பெருமையாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியின் சௌகிதார் பிரச்சாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பக்கம்தான் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தியது.
2019 மக்களவைத் தேர்தலில், பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உயர்வுக்காகவும் தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.
இரவு பகல் பாராது, தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் பிரதமர் மோடியை, லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழாவில், உரையாற்றிய அவர் ,”நரேந்திர மோடிக்கு குடும்பம் இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள் என அனைவரும், தங்களுடைய சமூக வலைத்தளங்களில், தங்கள் பெயர்களுக்கு பின்னால், ‘மோடியின் குடும்பம்’ (Modi Ka Parivar) என்று சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த நாட்டின் 140 கோடி மக்கள்தான் எனது குடும்பம். எனது பாரதம் எனது குடும்பம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜகவினர் ‘எனது பாரதம், எனது குடும்பம்’ என்று கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை எவ்வாறு விமர்சித்தாலும், அதுவே பிரதமர் மோடிக்கு வெற்றியாக அமைந்து விடுகிறது.