நாங்கள் மோடியின் குடும்பம் என்ற வாசகம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் களமிறக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
நான் அவர்களை கேள்வி கேட்பதால், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பம், இன்று நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜகவினர் தங்களது பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் (Modi Ka Parivar) என்ற பெயரை சேர்த்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், தங்களது எக்ஸ் பதிவில் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
நாடு முழுவதும் மோடியின் குடும்பம் என்பது trend ஆகி வருகிறது. பாஜக மட்டுமின்றி பிரதமர் மோடி மேல் பற்று கொண்ட பொதுமக்களும் மோடியின் குடும்பம் என கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாங்கள் மோடியின் குடும்பம் என்ற பதாகைகள் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. அதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Display of love & affection for our Hon PM Thiru @narendramodi avl by the people of TN.
We are Modi’s Family!
நாங்கள் மோடியின் குடும்பம்! (1/2) pic.twitter.com/SNZpdSiD9k
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2024