Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது, இன்று பீகாருக்கு சுமார் 13,000 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பீகார் வளர்ச்சியடைவது அவசியம். தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கோரி தனது உரையைத் தொடங்கிய பிரதமர்,மேற்கு வங்கத்தில் 12 கி.மீ தூரம் road show இருந்ததாக தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பல நூற்றாண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருவதாகவும், நாட்டிற்கு சிறப்பாக சேவை செய்த ஆளுமைகளை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பீகார் எப்போது செழிப்பாக இருந்ததோ, அப்போதெல்லாம் இந்தியா செழிப்பாக இருந்தது என்பது உண்மை என்றும், எனவே இந்தியா வளரும் போது பீகார் வளர்ச்சி அடைவது முக்கியம் என்றும் மோடி தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில், ஒரு குடும்பம் செழித்தது என்றும், இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் கூறினார்.வேலைகளுக்குப் பதிலாக நிலங்கள் எப்படி அபகரிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.