தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் K.P.K. செல்வராஜ் பாஜகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இன்றைய தினம், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவரும், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் சமூகப்பணிகள் ஆற்றி வரும் சமூக சேவகருமான, K.P.K. செல்வராஜ் , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, நமது கட்சியின் மூத்த தலைவர்களின் முன்னிலையில், தமிழக பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.
திரு. K.P.K. செல்வராஜ் அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, பாஜக முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான அரசியலில், அவரது முழுப் பங்களிப்பையும் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.