புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருக்கும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் குறைத்து 400 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில், கடந்த 10 வருடங்களில் பெண்களை மேம்படுத்த வேண்டும் என அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட மூன்றரை கோடி வீடு கட்டப்பட்டுள்ளது. அதன் பட்டா பெண்களின் பெயர்தான் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு இலவச கழிப்பறை கட்டப்பட்டதோடு, புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம், இயற்றப்பட்டது. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலலும் 33% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.
யாராக இருந்தாலும் சாலையில் வந்து பொதுமக்களுக்கு இடையூறாக வழிபாடு செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்தது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என எல்.முருகன் தெரிவித்தார்.