டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை குறிக்கிறது என்றும், நமது சமூகத்தில் அதிக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்றும் கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 1000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000 கோடி வங்கிக் கடன் வழங்க உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.