உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று நடைபெற்றது.

இது பாரத் சக்தி என அழைக்கப்படுகிறது. இதனை வெளிநாட்டு பிரதிநிதிகள் 30 பேருடன் பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், 150 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆர்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்

இன்று நாம் கண்ட காட்சிகள்  முப்படைகளின் வீரம், வெற்றியின் முழக்கம் உலகின் அனைத்து திசைகளிலும் எதிரொலிக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான அழைப்பு. பிறரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். அதனால்தான், சமையல் எண்ணெய் முதல் நவீன விமானங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா ‘ஆத்மநிர்பர்தா’வில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவு அடைய செய்ய தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

மேக் இன் இந்தியாவின் வெற்றி நம் முன்னே உள்ளது. நமது துப்பாக்கிகள், டாங்கிகள், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள். இதுதான் ‘பாரத் சக்தி’ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும்  நம்மால் தயாரிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவாக மாற்றுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், கொள்கைச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், எம்எஸ்எம்இ ஸ்டார்ட்அப்களை உருவாக்கியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modimodi speechBharat Shakti'pokran
ShareTweetSendShare
Previous Post

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

Next Post

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies