கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் பண்டிகை வரப் போகிறது. இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஈஸ்டர் திருநாளில் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராம நவமியும் ஹோலியும் நெருங்கிவிட்டன.புனித மாதம் ரம்ஜானும் தொடங்க உள்ளது.
பா.ஜ.க மீதான கேரள மக்களின் பாசம் இம்முறை மகத்தான மக்கள் ஆதரவாக மாறும் என்று நம்புகிறேன். கேரள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கிறேன். கேரளாவில் தாமரை மலரப்போகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈராக்கில் போரில் சிக்கிய செவிலியர்களை அழைத்து வந்தோம். நெருக்கடிக்கு மத்தியில் சிக்கிய பாதிரியார்களை மீட்டு வந்தோம்.
கொரோனா காலத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு மத்திய அரசாங்கம் பாதுகாப்பாக இருந்தது.
கேரள கலாச்சாரம் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் UDF மற்றும் LDF இதை நசுக்குவதற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் கலாச்சாரம் அமைதியை ஊக்குவிக்கிறது. ஆனால் UDF மற்றும் LDF அரசியல் வன்முறையை நம்புகின்றன.
எல்.டி.எப் தங்க கடத்தல் மூலம் கொள்ளையடிப்பதில் பெயர் பெற்றது. யு.டி.எஃப்-ன் சூரிய மின் சக்தி ஊழலுக்கு பெயர் பெற்றது. கேரளாவில் ஊழல் மற்றும் திறமையற்ற அரசாங்கத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். LDF மற்றும் UDF அரசாங்கங்களின் சுழற்சியை உடைத்தால் மட்டுமே மக்கள் நிமமிதி அடைவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.