தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களைத் இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
தேர்தலின் போது போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் ஆணையம் குறிப்பிடும் நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
அந்த வகையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட 27 பேரை தகுதி நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வேளை, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், தற்போது மக்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பதவியில் இருந்தும், தேர்வு செய்யப்படுவதில் இருந்தும் 3 ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.