2024 ஐபிஎல் 2-ஆம் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் இல்லையா? வேறு எங்கு நடைபெற உள்ளது ?
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் 2-ஆம் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் இல்லையா? வேறு எங்கு நடைபெற உள்ளது ?

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல்  காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி துபாயில் நடைபெற்  வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.  முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை முழுமையாக வெளியிடாமல் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  ஏனெனில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறுவதால் அந்த தேதியை வைத்தே ஐபிஎல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று  மதியம் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

அதே போல இந்த முறையும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால், எந்தெந்த தேதிகளில் எல்லாம் வாக்கெடுப்பு நடக்குமோ, அந்த தேதிகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம்.

தற்போது பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வார தேதிகளை மட்டுமே அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 7 க்கு பிறகான ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

அந்த சமயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதால் ஏப்ரல் 7 முதல் மே மாதம் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கு 2024 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

இதனால் ரசிகர்களும் சோகத்தில்  உள்ளனர். ஏனெனில் வெளிநாடுகளுக்கு சென்று ஐபிஎல் போட்டியை காண முடியாது. அதேபோல் 2019 ஐபிஎல் தொடர் நாடாளுமன்ற தேர்தலுக்கு நடுவே எந்த பிரச்சினையும் இன்றி நடந்தது போல இந்த முறையும் நடக்க வேண்டும் என்பதே ஐபிஎல் அணிகளின் எண்ணமாக உள்ளது.

Tags: Indiadubaiipl 2024stadium change
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Next Post

தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies