ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் தெலுங்கானா மாநில வளர்ச்சியின் ஒவ்வொரு கனவையும் தகர்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என தெலங்கானா மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு தெலுங்கானா மக்களின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டையும் சாடியை அவர், வாரிசு அரசியல் கட்சிகளின் ஊழல் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் ஊழலின் பங்காளிகள் என்றார் அவர்.
2ஜி ஊழலை காங்கிரஸ் செய்தது, அதே நேரத்தில் பிஆர்எஸ் பாசனத்தில் ஊழல் செய்தது. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் நில மாஃபியாவை ஆதரிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என மக்கள் முடிவை அறிவித்துள்ளதாகவும் மோடி கூறினார்.
மேலும், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார். அதே மாற்றத்தை தெலுங்கானாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார்.