அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல்களின் வாக்குகளை எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இரு சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் 02.06.2024 அன்று முடிவடைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணும் தேதிகளை மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-இல் இருந்து ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் தேதி ஜூன் 6-இல் இருந்து ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.