திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. நன்றி கோவை. நீங்கள் காட்டிய அன்பை எப்போதும் போற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே. pic.twitter.com/kVOanvtbQ0
— Narendra Modi (@narendramodi) March 18, 2024