டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில், புது டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார்.
டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கூட்டணியால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இவை சுயநலன் கொண்ட கட்சிகள் என்றும் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த முறை டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
400 இடங்களுக்கு மேல் என்ற முழக்கம் வெறும் வார்த்தை இல்லை என்றும், பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பாஜக பெறும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை செய்தார். 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, இராமர் கோவில் கட்டுவது, பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவது என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.