முதல்வர் ஸ்டாலினின் பொள்ளாச்சி வருகைக்காக வலுக்கட்டாயமாக பெறப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் - அண்ணாமலை கண்டனம்!
Mar 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் பொள்ளாச்சி வருகைக்காக வலுக்கட்டாயமாக பெறப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் – அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருகைக்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை, வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெறப்பட்டுள்ளது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது?

மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின்  உணர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: school busesannamalaicm stalinTamil Nadu BJPPollachi
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங் !

Next Post

மஹூவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies