தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களின் கடின உழைப்பாளர்களுடன் உரையாடும் ‘எனது பூத், வலிமையன பூத்’ நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள நமது காரியகர்த்தாக்கள் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், பாஜக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது பாராட்டுக்குரியது.
தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போயுள்ளது. பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகம் பார்க்கிறது என்பது உண்மை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.