தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பாக, நீலகிரி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாஸ்டர் மதனிடம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆசி பெற்றார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இன்று, முதல் நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறோம். பிரச்சாரம் தொடங்கும் முன்பாக, நமது முகாம் அலுவலகத்தில், இதே நீலகிரி தொகுதியின், நமது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அய்யா மாஸ்டர் மதன் அவர்களிடம் ஆசி பெற்றேன்.
இந்த முறை நீலகிரியில் தாமரை மலர்வதும், நமது மக்கள் வளர்வதும் நமது கையில். தாமரையின் மலர்ச்சி..! நீலகிரியின் வளர்ச்சி..!” என்று பதிவிட்டுள்ளார்.
இன்று, முதல் #நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் துவங்குகிறோம். பிரச்சாரம் துவங்கும் முன்பாக நமது முகாம் அலுவலகத்தில், இதே நீலகிரி தொகுதியின், நமது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அய்யா மாஸ்டர் மதன் அவர்களிடம் ஆசி பெற்றேன்.
இந்த முறை… pic.twitter.com/i7228EW7sa
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 31, 2024