காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதெல்லாம், நமது நாட்டின் எல்லை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான வீடியோவின் இரண்டாம் பகுதி நாளை வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகம். காங்கிரஸும் திமுகவும் கூட்டணி சேர்ந்து, இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரைவார்த்த வரலாறு.
மத்தியில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் நமது நாட்டின் எல்லைகளை, நாட்டின் ஒருமைப்பாட்டை, நாட்டின் இறையாண்மையைப்… pic.twitter.com/AjlnnKAuTJ
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 31, 2024
Congress & DMK colluded in the ceding of Katchatheevu by Sri Lanka.
The Congress, whenever in power, had the least interest in securing our country’s border, territorial integrity & sovereignty. pic.twitter.com/mryS2eGumE
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 31, 2024