பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருதமலை அடிவாரம், வடவள்ளி பேருந்து நிலையம், சுண்டப்பாளையம், வீரகேரளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் சாமனிய மக்களுக்கான பத்தாண்டு கால நல்லாட்சியில், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து மீட்டிருக்கிறோம்.

உலகப் பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு  முன்னேறியிருக்கிறோம். தொழில் வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என, அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் திட்டங்களைச்  செயல்படுத்தியிருக்கிறோம். நாட்டின் உட்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தி  இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறோம்.

திமுகவின் கடந்த 33 மாத கால ஆட்சிக்கு, நெகடிவ் மதிப்பெண்தான் கொடுக்க முடியும். ஆனால், நமது பாரதப் பிரதமர் 10 ஆண்டு கால நல்லாட்சியில், கொடுத்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல மக்கள் மத்தியில் நேர்மையாக, தைரியமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். கோயம்புத்தூரில் எப்போதும் மோடி அலைதான் வீசிகொண்டிருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கான தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளில், வளருகின்ற நாடாக இருக்கும் நமது இந்தியா, வளர்ந்த இந்தியாவாக, உலகின் முதன்மை நாடாக மாறப்போகிறது. நதி நீர் இணைப்பு உள்ளிட்ட 70 ஆண்டு காலமாக, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முக்கியமான முடிவுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்படும்.

பாராளுமன்றத்தில், நமது பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400 க்கும் அதிகமான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். எனவே, கோயம்புத்தூர், பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிகளில், தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, நமது பாரதப் பிரதமருக்குத் துணை இருப்பதை, பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரதமர் மோடி போன்ற வலிமையான பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி வரிசையில் யாரும் இல்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில், கோயம்புத்தூரின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. குறிப்பாக, திமுகவின் அலட்சியத்தால், கோயம்புத்தூர் தனது பொலிவை இழந்து நிற்கிறது. கோயம்புத்தூரின் நீர்நிலைகள் வற்றிப் போகின்றன. சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, திமுகவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நமது பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களைச் செயல்படுத்த, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1400 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க, கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தவறி விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுவிட்டது.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, நொய்யல் நதி சீரமைப்பு, விமான நிலையம், ரயில் நிலையம், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் நிறைவேற்ற, வனவிலங்கு-மனிதர்கள் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நொய்யல் நதியைச் சுத்தப்படுத்த, பிரதமர் மோடி ரூ.970 கோடி வழங்கியுள்ளார். ஆனால், திமுக அரசு, நொய்யல் நதியைச் சுத்தம் செய்துள்ளதா? அம்ருத் 2.0 திட்டத்தை, கலைஞர் நூற்றாண்டு திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று அரைகுறையாக அல்லாமல், நொய்யல் நதியை முழுமையாக மீட்டெடுக்க, பிரதமரின் வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க, புதிய திட்டங்களைக் கேட்டுப் பெற, நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும்.

1980களில் தொடங்கிய வீரகேரளம் ஹவுசிங் போர்டு பிரச்சினை மற்றும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும், கடந்த 2009 ஆம் ஆண்டு, தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மூன்று மாதங்களில் தீர்ப்போம் என்று கூறினார்.

15 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை.
பாஜக சார்பில், கோயம்புத்தூரின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திமுக அரசுடன் சண்டை போட்டாவது, இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வினைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தேசியத் தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான, நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். பெருமளவில், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர்கள் என அனைவரும் எழுச்சியுடன் நமது பிரதமர் மோடிக்காக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, அண்ணாமலையாகிய என்னை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: coimbatoreannamalai campignpm candidateannamalaiDMKkovai
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டு வெடிப்பு! – சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!

Next Post

புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies