திருப்பதியில் அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டம்!
Oct 14, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதியில் அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Apr 2, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்னமாச்சார்யாவின் 521வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் 1408 ஆம் ஆண்டு பிறந்தவர் அன்னமாச்சார்யா.

இவர் தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்து, 32,000 கீர்த்தனைகளையும் இயற்றியவர். பஜனை மரபைத் தொகுத்து வழங்கியவர் என்ற சிறப்பு பெற்றவர்.

பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது. இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. இவர் ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.

இவர் ‘இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு’ என்று தனது ‘பிரம்மம் ஒக்கடே’ பாடலில் எழுதியுள்ளார். தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் ஏராளமான பாடல்களை இயற்றினார்.

அன்னமாச்சார்யா 95-வது வயதில் 1503 மறைந்தார். இவர் திருமலை ஏழுமலையான் மீதி அதீத பக்திகொண்டவர். இந்நிலையில் அவரது 521வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் “சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம் நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி கோஷ்டிகானம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்குத் திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா -கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியான மந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், அவரின் சொந்த ஊரில் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

Tags: Tirumala tirupathi templeAnnamacharya birthday celebration in Tirupati!
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Next Post

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related News

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

1638 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

திமுக பகுதி செயலாளர் தவமணி கட்சியிலிருந்து நீக்கம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

கலிஃபோர்னியாவில் 52வது ஆண்டாக நடந்த பூசணிக்காய் போட்டியில் வென்ற பொறியாளர்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

Load More

அண்மைச் செய்திகள்

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு – பிரதீப் ரங்கநாதன்

இன்ப நிதியை இயக்கும் மாரி செல்வராஜ்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies