ஒடிசா சட்டப்பேரவை தேர்தலுக்கான 112 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் பெரும்பான்மையான சட்டப்பேரரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக நவீன் பட்நாய்க் தேர்வு செய்யப்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் மே 13 முதல் மே மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 142 சட்டமன்ற தொகுதிகளில் 112 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
22 எம்எல்ஏக்களில் பிரம்மகிரி சட்டமன்ற உறுப்பினர் லலிதேந்து பித்யாதர் மொகபத்ராவைத் தவிர 21 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் சந்த்பாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.