அமெரிக்காவில் இந்து கோயில்கள் இடிப்பு விசாரணையின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு 5 இந்திய வம்சாவளிகள் அமெரிக்கா சிவில் உரிமைப் பிரிவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்து ஆலயங்கள் பல இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இந்து கோயில்கள் பல இருக்கின்றன.
அந்த இந்து கோவில் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரில் எழுதிவைத்த வாசகத்தால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைப் பிரிவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 நபர்கள் , அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணையின் தகவல் என்ன வென்று கேட்டு கடிதம் எழுதினர்.
அந்த கடிதத்தில் அமெரிக்காவில் உள்ள ஐந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ தானேதர், ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பெரா ஆகியவர்கள் கையெழுத்திட்டனர்.
அந்த கடிதத்தில், “நாடு முழுவதும் இந்து கோவில்கள், வழிபாட்டுத் தளங்கள் சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த நாங்கள், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இடையே உள்ள சட்ட அமலாக்க ஒருங்கிணைப்பை நன்கு புரிந்துகொள்வதற்காக, இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து சிவில் உரிமைகள் பிரிவுகளின் கீழ் நீதித் துறையிடம் விளக்கத்தைக் கேட்கிறோம்” என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.